வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மழலைகள்.காம் செய்திமலர் - 05 நவம்பர் 2006

மழலைகள்.காம் செய்திமலர் - 05 நவம்பர் 2006
http://www.mazhalaigal.com/all-issues/issues-001/issue_0602.php

வெற்றி வளவன் படைப்புகள்
http://www.mazhalaigal.com/tamil/stories/stp001_vetrivalavan.php
கவிஞர் வெற்றி வளவன் மழலைகளுக்காகத் தொடர்ந்து கவிதைகளுக் கதைகளும் எழுதி வருகிறார். இவற்றுள் குறிப்பிடத்தக்கது அவரது பிரதாபன் கதை

அருந்தமிழ் விருந்து - ஆகிரா
http://www.mazhalaigal.com/team/vishy.html
அணிசிறக்கும் தமிழைப் படைத்தார்
அகத்தியர் எனும் குறுமுனி - அதைக்
கணினியில் வடிக்கும் வகையமைத்தார்
விஷி எனும் இளம் விஞ்ஞானி

இன்மொழி - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_advice.php
உண்ணும் முன் பிரார்த்தனை வேண்டும் குழந்தாய்,
நாளும் நன்றியுடன் முடிக்க வேண்டும்;
இறை நாமத்தை ஜபிக்க வேண்டும் குழந்தாய்,
அன்பால் வாழ்க்கை தொடர வேண்டும்.

வாழ்வின் லட்சியம், பாகம் 1 - அசலம்
http://mazhalaigal.com/philosophy/philosophy-001/0602pkva_life.php
இம்மூன்று குணங்கள் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தன்மையை ஒட்டியுள்ளது. எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக அல்லவா? ஆனால் சிலர் உண்ணுவதற்காகவே வாழ்கிறார்கள். உணவு மட்டும்தான் நம் வாழ்வின் நோக்கமா?

ஏமாந்த காகம் கதை - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_crow.php
அம்மாக் காகம் அழைத்தது,
காக்கா கா..., கா..., கா...,
பறந்து வந்தது குழந்தைக் காகம்
 கரைந்தது கா..., கா..., கா...,

Story writing contest - mazhalaigal
http://www.mazhalaigal.com/children/contests/0602mgl_story.php
This contest is closed. More and more such contests will be announced soon

குழந்தைகள் தினம் 2006 - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_children.php#.UhT1FkLrbDc
குழந்தைகளுக்கு ஒரு தினம்
எங்களுக்கும் குதூகலம்
எங்கு பார்த்தாலும் போட்டிகள்,
ஜெயித்தால் நிறையப் பரிசுகள்,

A STORMY DAY AT SEA - T Swaminathan
http://www.mazhalaigal.com/art/art-001/0602ts_sky.php
The cloudy sky has started fading
 From the reddish tinge of the evening
 As the sun sets and the birds panic
 On a stormy day at sea that turns black

Sumo Wrestling - சுமோ மல்லு
http://www.mazhalaigal.com/differences/differences_021.php
There are at least one or more differences between the two pictures. Find them.

Sketching Contest - Team Mazhalaigal
http://mazhalaigal.com/children/contests/0602mgl_sketching.php
Sketching contests will be held periodically for children of various age groups at suitable time decided by
Mazhalaigal Team of authors. 

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மழலைகள்.காம் செய்திமலர் - 21 அக்டோபர் 2006

மழலைகள்.காம் முதல் இதழின் செய்திமலர்

மழலைகள்.காம் செய்திமலர் - 21 அக்டோபர் 2006

The amusing world of Children 
The contents of this site are organized so as to be suitable for being viewed by children as well as adults with a view to enhance the interaction between children and elders in order to achieve our target of developing skills in children. 

தீபாவளி விருந்து - இணையப் பாட்டி
பாட்டி நல்ல பாட்டி, அன்பைப் பொழியும் பாட்டி,
தீபாவளிக் காலை என்னை எழுப்பி விட்ட பாட்டி, 
சோம்பிப் படுத்த எனக்கு,
பட்டாசு காட்டிய பாட்டி

Artwork by kids 
Children exhibit wonderful talent and aptitude towards drawing pencil sketches as well as colorful artwork that are quite imaginative and impressive. Amazing results were and are being produced by the mazalais kids associated with me in developing and maintaining this website. 

General Knowledge section
See the collective images of Indian Prime ministers 

Picture Puzzles
picture puzzles from artwork created by children.

Learn Tamil - ஆகிரா 
மஹாகவி பாரதியாரின் கனவை நனவாக்கவென்றே, தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் அனேக சொற்களையும் அலசி ஆராய்ந்து, அவற்றை ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத எழுத்தக்களுடனும் சொற்களுடன் ஒப்பிட்டு உன்னதமான முறையில் படைக்கப்பட்டுள்ளதும், அனைவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தும் விதமாக உபயோகத்திற்கு எளிதும், செயல் திறனில் சிறந்ததுமான அழகி எனும் அரிய மென்பொருள் வாயிலாகத் தமிழ் மொழியைப் படிக்கவும், பேசவும், கணினியில் படைக்கவும் மழலைஸ் வாசகர்களுக்கு உதவ தமிழ் போதிக்கும் பகுதியை இத்தளத்தில் 
வழங்குகிறோம். 

VIDEO MAIN PAGE 
Pattukkottai Kalyanasundaram songs - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடல்கள் 

Improve your Intelligence
devoted to improving the intelligence quotient and knowledge of children and others by way of brain teasers including puzzles and riddles, picture puzzles and intelligence quiz.
தீபாவளி அறிவுரை - இணையப் பாட்டி
நீங்கள் தீபாவளி உத்சாகத்தில் புது உடை, மத்தாப்பு, பட்டாசுகள், மற்றும் தின் பண்டங்களுடன் மஜாவாக வளைய வருவதைப் பார்க்கிறேன். காலையில் கடவுளுக்கு முன் நின்று பிரார்த்தனை செய்ய மறக்காதீர்கள். 

Learn the art of sketching - Gopi 
I have shared the techniques that struk my mind and will share the methods that strike my mind in my experience. The artists who see these points can share the techniques that they observed. 

குறிக்கோள் - சுகந்தி
ஒரு குறிக்கோள் உங்களுக்கு வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் தினமும் செயல் பட்டால் நாமும் முன்னேறலாம், நாடும் முன்னேறும்” 

ஓவியம் கற்றுக்கொள்ளுங்கள் - கோபி 
நிழலில் கருப்பின் திண்மை அதிகமாக ஆக ஓவியத்தின் ஆழம் (depth) அதிகமாகும். இதை மனதில் கொண்டு நிழல் வெளிச்ச விளைவுகளைக் கருப்பு வெள்ளை ஓவியத்தில் கொண்டு வரலாம். 

வியாழன், 19 மார்ச், 2009

மழலைகள்

குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

அத்துணை இனிமையான மழலைச் செல்வங்கள் வாழ்வில் வளம் பெறக் கல்வியும் பொது அறிவும் மிகவும் இன்றியமையாதவை. இவ்வழியில்
மழலைகளின் அறிவு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முழுமூச்சுடன் செயல்படும் இணையதளம் மழலைகள்.காம் ஆகும். அவ்விணையதளத்தில் அவ்வப்பொழுது பதிவேறும் படைப்புகளின் சிறு குறிப்புகளை அவற்றுக்கான சுட்டிகளுடன் வெளியிடுவதே இவ்வலைப் பதிவின் நோக்கம்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் ஆதலாம் அத்தலைவர்கள் தலைசிறந்தவர்களாக உருவெடுக்க உதவுவோமாக.


குழந்தைகளுக்காக

முற்றிலும் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு மாதந்தோறும் புதிய விவரங்கள் பதிவேற்றிவரும் தமிழ் - ஆங்கில இரு மொழி இணையதளமான மழலைகள்.காம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் பல அறிஞர் பெருமக்களின் உதவியும் ஆசிகளும் பெற்றுச் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தளம் குழந்தைகளின் கலைத்திறமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஒரு முக்கிய இடமளித்துள்ளது. குழந்தைகள் பலர் வரைந்த வனப்பு மிக்க ஓவியங்கள் பல இத்தளத்தில் தனிப்படவும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் முதலியவற்றுடன் இணைப்பாகவும் இதழ் தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் ஓவியம் வரைதல் மற்றும் கதை எழுதும் திறமைகளை வளர்க்கும் நோக்கில் இவற்றுக்கான போட்டி ஒன்றும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் வளர்ப்போம்

கணினித் துறையில் தமிழ் மொழியின் உபயோகத்தை அதிகப்படுத்துவது மழலைகள்.காம் தளத்தின் தலையாய பணிகளுள் ஒன்றாகும். ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களுக்கும் அவற்றின் உச்சரிப்புக்குத் தக்கவாறு அமைந்துள்ள ஆங்கில எழுத்துக்களை கணினியின் எழுத்துப் பலகையில் (Key board) தட்டுவதன் மூலம் உரிய தமிழ் எழுத்துக்கள் கணினியின் திரையில் அமையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள ஒலிபெயர்ப்பு மென்பொருள்களுள் (Transliteration software) முன்னணியில் நிற்கும், யாரும் எளிய முறையில் சிரமமில்லாமல் சரளமாக உயபோகிக்கும் விதத்தில் அமைந்துள்ள  "அழகி" எனும் மென்பொருளின் துணையுடன் தமிழ் மொழி அறிந்தவர் அதனைக் கணினியில் அனைத்து செயலிகளிலும் (in all applications) வடிப்பதற்கும், தமிழ் மொழி அறியாதவர் தமிழை அறிவதற்கும் உறுதுணை புரியவென்றே தமிழ்ப் பகுதி தலையாய பகுதியாக இத்தளத்தில் அமைந்துள்ளது. முக்கியமாகக் குழந்தைகள் தமிழைப் பயில்வதற்கும் தமிழைக் கணினியில் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்கிறது இப்பகுதி.

ஒலிபெயர்ப்பு

தமிழிலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் கணினியின் திரையில் தோன்றவைக்கத் தேவையான ஆங்கில எழுத்துக்களை அட்டவணையிட்டுக் காட்டி, அழகி  மென்பொருளை உபயோகித்து தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல், கதை, கட்டுரை முதலியவற்றை உருவாக்குதல் மற்றும் பிழை திருத்துதல் ஆகிய பணிகளை கணினியின் முக்கியமான அனைத்துச் செயலிகளிலும் மேற்கொள்ளத் தேவையான விவரங்கள் இங்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. தமிழைக் கையாள்வளதற்கு ஏற்ற வகையில் கணினியை எவ்வாறு தயார் செய்வது எனும் விளக்கமும் இவ்வுப பகுதியில் அடங்கியுள்ளது.

தமிழ் கற்பித்தல்

அகரத்தில் தொடங்கி அனைத்துத் தமிழ் எழுத்துக்களுக்கும் எடுத்துக்காட்டாகப் பல சொற்களை மேற்கோள் காட்டி அச்சொற்களுக்கான ஓவியங்கள் பலவற்றைக் குழந்தைகளைக் கொண்டு வரைந்து விளக்குவதாக அமைந்துள்ளது மழலைகள்.காம் தளத்தின் தமிழ் கற்பிக்கும் உப பகுதி.

இப்பகுதியில் மேலும் விவரங்களைச் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழ் உச்சரிப்பை ஒலி வடிவிலும் இணைத்து தமிழ் கற்பிக்கும் உப பகுதியை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் இலக்கியம், இலக்கணம்

பண்டைத் தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழில் மாதந்தோறும் இடம் பெறுகின்றன. தமிழ் இலக்கணத்தை தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு விரிவாகக் கற்பிக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது அறிவு

குழந்தைகளின் பொது அறிவு வளரத் தேவையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதழ்தோறும் பதிவேற்றப் படுகின்றன. உலக நாடுகள், அவற்றின் தலைவர்கள், வரலாறு, முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் முதலிய விவரங்கள் இதில் அடங்கும். படங்களுடன் கூடிய கேள்வி பதில் பகுதி (Photo Quiz) ஒன்று வெளியாகிறது. இது தவிர புதிர்களும் விடுகதைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப் படுகின்றன. உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், இலக்கிய மேதைகள், ஞானியர் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகள், மற்றும் குறிப்புகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன.

ஆன்மீகமும் தெய்வீகமும்

குழந்தைகள் மற்றும் அனைவரது மனங்களும் பண்பட்டு, தெளிவு பெற உதவும் இன்றியமையாத விவரங்கள் இப்பகுதிகளில் இத்துறையில் சிறந்த எழுத்தாளர்கள் மூலம் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. பகவத் கீதை, ஆதி சங்கரர் அருளிய பஜ கோவிந்தம் முதலியவற்றில் இடம்பெறும் ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் விரிவான விவரங்கள் இப்பகுதியில் அடங்கியுள்ளன. இராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் மற்றும் ஆலயங்களைப் பற்றிய விவரங்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. கிரேக்கப் புராண இதிகாசக் கதைகளும் இத்தளத்தில் உள்ளன. மதச் சார்பற்று இயங்கும் நோக்கில் அனைத்து மதத்தவரிடமிருந்தும் தகுந்த விவரங்கள் பிரசுரிப்புக்கு வரவேற்கப் படுகின்றன.

வாழ்க்கை, கேளிக்கை, கல்வி

கணினி வழியே குழந்தைகளும் பிறரும் விளையாடி மகிழ விளையாட்டுக்கள், வீடியோ, இசை போன்றவை மழலைகள்.காம் தளத்தில் உள்ளன. குழந்தைகள் வளர்ப்பு பற்றிய சிறப்புப் பகுதியொன்று இத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. குழந்தைகளின் கல்வியறிவை மேம்படுத்தத் தேவையான விவரங்கள்,  கணினியில் பயன்படுத்தும் மென்பொருட்கள் பற்றிய குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப் படுகின்றன.